காதலனிடம் மோதிரத்தை கழட்டி கொடுத்த மாணவி.. திருப்பி கேட்டதால் காதலன் வச்ச ஆப்பு.!

0
66

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே காரங்காடு புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜின். இவர், கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வந்த நிலையில், இவரது குடும்பத்தினர் பேயன்குழியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஷாஜினுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மாணவி 11ஆம் வகுப்பு படிக்கும்போது மாணவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு மாணவி தனது கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை கழற்றி காதலுக்கு கொடுத்தார். அந்த மோதிரத்தை காதலன் ஷாஜின், அடகு வைத்து பணம் பெற்று, அதை செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பல மாதங்களாகியும் மோதிரத்தை ஷாஜின் திருப்பித் தராததால், மாணவி சந்தேகமடைந்து, மோதிரத்தை தரும்படி, ஷாஜினிடம் கூறியுள்ளார். அப்போது அவர், ‘மோதிரம் வீட்டில் இருக்கிறது.. என்னுடன் வா தருகிறேன்’ என்று கூறி மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், மாணவியுடன் உல்லாசமாக இருந்ததை ஷாஜின் வீடியோவும் எடுத்துக் கொண்டார். இதையடுத்து, மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை காண்பித்து பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். கடைசியாக மாணவியிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். பணத்தை தரவில்லை என்றால் வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதற்கிடையே, மாணவி ஆடை மாற்றும் படத்தை சமூக வலைதளத்தில் ஷாஜின் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து, தனது பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவியின் பெற்றோர் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here