அதிக விலைக்கு அரிசி விற்பனை – இரவிலும் சுற்றிவளைப்பு..!

0
23

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, இன்று இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் அதிகாரிகள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த பல வர்த்தகர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.

அதேபோல், வார இறுதி நாட்களிலும், எதிர்காலத்தில் இரவு நேரங்களிலும் சுற்றிவளைப்புக்களை நடாத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முகவர்களை அனுப்பி அரிசி மொத்த விற்பனை நிலையங்களை ஆய்வு செய்யவும், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்பொருள் அங்காடிகள் உட்பட சில்லறை மற்றும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

விற்பனை நிலையங்களில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளுக்காக சிறப்புக் குழுக்களை ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here