காத்தான்குடியிலிருந்து திருகோணமலைக்கு சென்ற வேன் சேருவிலவில் தரித்து நின்ற பட்டாவில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த டொல்பின் வேன் சேருவில – தங்கநகரில் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வீதியோரம் தரித்து நின்ற சிறிய பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாகனங்களும் வேலிக்குள் தூக்கி வீசப்பட்டதுடன் பலத்த சேதமடைந்துள்ளன.
சம்பவத்தில் காயமடைந்த 4 பேரும் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.