ஜனவரி 24 ஆம் திகதி வெள்ளிக் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
53

மேஷம்:
இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான காரியங் களிலும் கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக சோர்வு ஏற்படக் கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சக வியாபாரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

மிதுனம்:
இன்று தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் கூடுத லாகக் கிடைக்கும்.

கடகம்:
உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். முக்கியமான விஷயம் தொடர்பாக வாழ்க்கைத்துணையிடம் ஆலோ சனை கேட்பீர்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத் தில் எதிர்பார்த்த சலுகை இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட்டு விலகும்.

கன்னி:
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் தேவையறிந்து பண உதவி செய்வார். சிலருக்கு உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

துலாம்:
இன்று புதிய முயற்சியைத் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். நீங்கள் கொடுத்த கடனில் ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் சக வியா பாரிகளால் மறைமுகத் தொந்தரவு ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
தேவையான பணம் கையில் இருப்பதால், செலவுகளை சமாளித்து விடுவீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வீட்டில் தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது தேவையற்ற பிரச்னை களைத் தவிர்க்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு:
இன்று எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற் கொள்ள நேரிடும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பக்குவமான அணுகுமுறை நல்லது.

மகரம்:
உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பா ராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் மிக வும் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.

கும்பம்:
எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகை யில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு விரைந்து முடிப்பீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

மீனம்:
தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். குலதெய்வப் பிரார்த் தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். பயணத்தின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பொறுமை அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here