மட்டக்களப்பில் நண்பியை பார்க்க வீடு சென்ற 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சம்பவம்.!

0
118

மட்டக்களப்பு – ஏறாவூரில், நண்பியின் வீட்டுக்கு சென்ற 10 வயது சிறுமியை, பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட, நண்பின் 37 வயதுடைய தந்தை, கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த குறித்த 10 வயது சிறுமியின் பெற்றோர், சிறுமியை கைவிட்டு தாங்கள் வெவ்வேறு திருமணங்கள் செய்து கொண்டுள்ள நிலையில், கைவிடப்பட்ட சிறுமியை பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் மீட்டு, சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் பராமரித்து வருகின்றனர்

சம்பவதினமான நேற்று, பாடசாலைக்கு சென்ற சிறுமி, மதியம் 2.00 மணியாகியும் இல்லத்துக்கு திரும்பாததையடுத்து, நன்னடத்தை இல்ல உத்தியோகத்தர்கள் அவரை தேடி பாடசாலைக்கு சென்று தேடிய போது, சிறுமியை காணவில்லை.

இதனையடுத்து, சிறுமியை அந்த பகுதியில் தேடிவந்த நிலையில், அவர் ஏறாவூரில் அவரது நண்பியின் வீட்டுக்கு சென்றுள்ளார், என கண்டறிந்த உத்தியோகத்தர்கள் சிறுமியை தேடி அங்கு சென்றனர்.

அங்கு சிறுமியின் நண்பியின் தாயார் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்ததாகவும், சிறுமியின் தந்தை தனிமையில் இருந்த நிலையில், நண்பியை தேடி சென்ற சிறுமியை வீட்டினுள் கூட்டிச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட வேளையில், சிறுமியை அங்கிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, 37 வயதான குடும்பஸ்தரை கைது செய்ததுடன், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here