2 கிலோ கஞ்சாவுடன் 27 வயது யுவதி ஒருவர் கைது.!

0
60

புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு பகுதியில் கேரளக் கஞ்சாவுடன் இளம் பெண்ணொருவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சின்னப்பாடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

வடமேல் கடற்படையின் தம்பபண்ணி கடற்படையினருடன் இணைந்து, புத்தளம் பிரதேச குற்ற விசாரணை பிரிவினர் இணைந்து இன்று (25) சந்தேகத்திற்கிடமான வீடொன்றினை பரிசோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த வீட்டில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளக் கஞ்சா 2 கிலோ 245 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா 8 இலட்சம் ரூபா பெறுமதியென மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மதுரங்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here