திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில், மூதூர் பொலிஸ் பிரிவின் ஜின்னாநகரில் காரொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில், மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார், முச்சக்கரவண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளை, முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் மோதி, மரமொன்றுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதில் காரில் பயணித்த இருவர், முச்சக்கர வண்டி சாரதி ஆகிய மூவர், படுகாயம் அடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.