கடந்த 19-ந்தேதி முதல் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கியதையடுத்து பிடித்து வைத்துள்ள கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்படி, காசாவில் இருந்து, ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் பணய கைதிகளில் 33 பேர் விடுவிக்கப்பட உள்ளனர்.
முதல்கட்டத்தில் இஸ்ரேல் மக்கள் 3 பேர் கடந்த ஞாயிற்று கிழமை விடுவிக்கப்பட்டநிலையில், 2-ம் கட்டத்தில் இஸ்ரேல் பணய கைதிகளில் கரீனா அரிவ், டேனியலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பேர் விடுவிக்கப்பட உள்ளனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகள் ஆவர். இதற்கு ஈடாக 200 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர் என்றும் இதன்படி, இன்று (சனிக்கிழமை) மதியம் பரஸ்பரம் இவர்களை விடுவிக்கும் நிகழ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன் கமாஸ் சிறைபிடித்த 4 பெண் இஸ்ரேலிய வீரர்கள் இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தற்போது குறித்த நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. Live video