மஹிந்தவின் மகனுக்கு 27 திகதி வரை விளக்கமறியல்..! Video

0
64

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவால் யோஷித கைது செய்யப்பட்டார்.

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோஷித ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பார்ப்பதற்காக அவரது சகோதரரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு சிஐடி பிரிவிற்கு இன்று வருகை தந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here