திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தொண்டா மானூர் கிராமத்தில் சுதேசி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த வாலிபருக்கு 19 வயது ஆகும் நிலையில் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த மாணவர் அரசு விக்டோரியா ஆண்கள் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்ட பின்னர் விடுதிக்கு திரும்பினார். அப்போது அறையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபர் சடலத்தை விட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் வாலிபர் சொந்த ஊரில் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்தது தெரிய வந்தது. இந்த இளம் பெண் மற்றும் வாலிபருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சரிவர இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் தான் வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இருப்பினும் வேறு ஏதேனும் காரணங்கள் தற்கொலைக்கு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.