வவுனியா சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் வழங்க முற்பட்ட குடும்ப பெண் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது குடும்ப பெண் ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் குற்றச் செயல் தொடர்பில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் மூன்று மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தரின் வழக்கு நேற்று வவுனியா நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணைக்காக வருகை தந்த அவரது மனைவி நீதிமன்றத்தில் இருந்து குறித்த குடும்பஸ்தரை சிறைச்சாலை கொண்டு சென்ற போது அவருடன் உரையாடி பொதி ஒன்றை வழங்கியுள்ளார்.
இதன் போது சந்தேகமடைந்த சிறைக்காவலர்கள் வவுனியா பொலிஸாரிடம் அறிவித்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஹெரோயின் போதைபொருள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியிலிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்படதுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.