இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் இன்று (26) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் வந்த மூன்று படகுகளையும் கடற்படை கைப்பற்றியுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் குழுவையும் அவர்களது படகுகளையும் கரைக்கு கொண்டு வந்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் (03) மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் (33) இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.