ஒட்டுசுட்டான் மத்தியஸ்த சபையில் ஒரு விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த சம்பவம் சோசியல் மீடியாவில் திரிபுபட்டு பகிரப்பட்டு வருகின்றது.
சசிதா என்பவர் தனது ஆடு ஒன்றை நாய் கடித்துவிட்டதாக முறையிட்டுள்ளார், இது ஒட்டுசுட்டான் இணக்கசபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,
குறித்த நாய் பல ஆடுகளை கொன்றதாக பதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். குறித்த பெண் 3 வருஷமாக இந்த பிரச்சினையை சந்தித்து வந்ததாக கூறப்படுகின்றது. 11 ஆடுகள் குறித்த நாயால் கொல்லப்பட்டதாக பதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
இணக்கசபையில் இருந்த இரு நீதவான்கள் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரித்து, குறித்த நாயை ஆட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். அதற்க்கு நாயின் உரிமையாளரும் சம்மதித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் குறித்த நீதிவான்கள் ‘குறித்த நாயை நீ கொன்றாலும் சரி, எங்கயாவது கொண்டுபோய் விட்டாலும் சாரி, இனி நாய் பிரச்சினை என்று வரக்கூடாது என்று கூறியுள்ளார்கள்’ என பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
அதன் பின்னர் ஆட்டின் உரிமையாளர் குறித்த நாயை கயிறை கட்டி கொண்டு செல்லும்போது, அந்த நாய் ஆக்ரோஷம் செய்துள்ளதாகவும், அதன் பின்னர் அவர் மரத்தில் அதை கட்டியபோது, கயிறு இறுக்கி உயிரிழந்ததாகவும் ஆட்டின் உரிமையாளரால் கூறப்படுகிறது.
ஆனால் குறித்த படத்தில் நாய் கொலைசெய்யப்பட்டது தெரியவருகிறது. மிருகவதை சட்டத்தின் கீழ் இப்படி ஒரு நாய் (தூக்கில் போட்டு) கொல்லப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்,
இந்த சம்பவம் தொடர்பில் சரியான உண்மை தன்மையை இணக்கசபையே கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் இவர்களே எதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
கீழே இணைக்கப்பட்ட இந்த வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து கூறியுள்ளார்கள், Video – eyetamil