யாழ்ப்பாணம் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட யாழ். ராணி புகையிரதம் ஓமந்தை பகுதியில் புகையிரத ஓட்டப் பாதை ஆகிய தண்டவாளத்தை உடைத்து கொண்டு சென்றது.
இதில் நான்கு புகையிரத பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலத்திய போதும் புகையிரத பெட்டிகள் தடம் புரளவில்லை.
பயணிகளிற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதே நேரம் வவுனியாவில் இருந்து யாழ்பாணம் நோக்கி புறப்பட்ட புகையிரதம் ஓமந்தையில் தரித்து நின்றது என்பதும் குறிப்பிடதக்க விடயமாகும்.
எனினும், தற்போது ரயிலின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பதிவான முதல் ரயில் தடம் புரள்வு சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.