காலி, அஹுங்கல்ல கடற்கரையில் கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று வெளிநாட்டவர்கள் கடல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போன நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் இரு சிறுமிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
அப்போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் மனோஜ் ஆரியரத்ன, பொலிஸ் கான்ஸ்டபிள் (19342) சங்கீத் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் (103992) துலஞ்சய ஆகியோர் அவர்களை மீட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட 54 வயதான உக்ரேனிய நபர், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிர் பிழைத்த இரு சிறுமிகளும் 13 மற்றும் 17 வயதுடைய உக்ரேனியர்கள் ஆவர்.
உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.