நாய் உயிரிழந்த விவகாரம் – பெண் கைது.!

0
91

நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய பெண்ணை மாங்குளம் பொலிஸார் கைது செய்தனர்.

மாங்குளத்தைச் சேர்ந்த சந்தேக நபர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வாயில்லா ஜீவராசிகளை துன்புறுத்த நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகவும் விளிப்புணர்வு எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும் என்பதால் We Feeders விலங்குநல அமைப்பினர் மேற்படி கொடூரத்தை அரங்கேற்றியவல்களுக்கு எதிராக நீதித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னர் வெளியிடப்பட்ட செய்தி;

ஒட்டுசுட்டான் பகுதியில் ஆட்டை கடித்ததாக கூறி நாய் கொலையா..? நடந்தது என்ன..?

கீழே இணைக்கப்பட்ட இந்த வீடியோவில் பாதிக்கப்பட்டவர்கள் கருத்து கூறியுள்ளார்கள்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here