நாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் – வெளியான மேலதிக தகவல்..!

0
41

நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய பெண்ணை மாங்குளம் பொலிஸார் கைது செய்தனர்.

மாங்குளத்தைச் சேர்ந்த சந்தேக நபர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானில் உள்ள சமஸ்தான சபையொன்று ஆட்டை கடித்த நாயை தூக்கிலிட தீர்ப்பை வழங்கியதாக விலங்குகள் நலக் கூட்டமைப்பினர் (AWC) தெரிவித்த குற்றச்சாட்டை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக AWC செயற்குழு உறுப்பினர் கலாநிதி சமித் நாணயக்கார dailymirror என்ற செய்திக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

We Feeders விலங்குநல அமைப்பினர் மேற்படி கொடூரத்தை அரங்கேற்றியவல்களுக்கு எதிராக நீதித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் மத்தியஸ்தக் குழு எடுத்த மனிதாபிமானமற்ற முடிவே இந்த நாய் கொல்லப்படுவதற்கு வழிவகுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கண்டனம் வௌியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த மத்தியஸ்தக் குழுவு தீர்ப்புக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here