தம்புள்ளை – மஹியங்கனை பிரதான வீதியில் வில்கமுவ பகுதியில் இன்று (27) மாலை நெல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்றதில் லொறியின் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் வாகனம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.
வேகக்கட்டுப்பாடை இழந்த சாரதி குறித்த வளைவில் திருப்ப முற்பட்டபோது இந்த கோர விபத்து இடம்பெறுள்ளது. (Accident1st)