9 மாத கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தையின் வயிற்றில் வளரும் கரு.. ஆச்சரியத்தில் மருத்துவர்கள்..!

0
260

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் 32 வயதான பெண் ஒருவர் 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அங்குள்ள அரசு பெண்கள் மருத்துவமனைக்கு சென்று 9ஆம் மாதம் சோனுகிராபி செய்த போது, அவரின் ‘கருவில் கரு’ வளர்வது கண்டறியப்பட்டது. அதாவது பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் உடலினுள் மற்றொரு வளர்ச்சி அடையாத கரு ஒன்று உருவாகியுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் கூறியதாவது, ஆரம்பத்தில் நான் அதிர்ச்சி அடைந்தேன், அதன் பின் கவனமாக ஸ்கேனை மறுபரிசீலனை செய்தேன். இது மிகவும் ஒரு அரிதான நிலை.

இது போன்ற ஒரு நிலை இருக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. எனவே நான் 2 மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தேன். அதன்பின் உறுதி செய்தேன் என்று தெரிவித்தார்.

மேலும் குழந்தை பிறந்த பின்னரே இந்த நிலை கண்டறியப்படும், ஆனால் இந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னரே கண்டறியப்பட்டுள்ளது. இது 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே நடக்கும் அரிய வகையான மருத்துவ நிலையாகும். இதுவரை உலகில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உருவாகியுள்ளது. அதுவும் இந்தியாவில் 15 முதல் 20 பேர் மட்டுமே என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here