தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆதனூரில் வசித்து வருபவர் ராமசாமி . இவரது மகள் மாலதி. இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை எப்போதும் வென்றான் சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். முதலுதவி செய்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கு சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் அதிகமாக அரிசி சாப்பிட்டதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். 12 வயதுடைய சிறுமி நீரில் ஊறவைத்த அரிசிகளை தொடர்ந்து சாப்பிட்டதால், மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலதி அங்குள்ள அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி எப்போதும் அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிடுவது வழக்கம் என தெரிகிறது. அதே போலவே சம்பவ நாளிலும் சிறுமி வீட்டில் இருந்தபோது, அதிகமாக அரிசியை ஊறவைத்து சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனால் வீட்டில் மூச்சுத்திணறி இருக்கிறார். இதனைக்கண்டு பயந்துபோன பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை. இதனால் சிறுமியை அவசர ஊர்தியில் தூத்துக்குடிக்கு அழைத்துச்செல்ல முற்பட்டுள்ளனர். ஆனால், சிறுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து இருக்கிறார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்டமாக உறவினர்கள் கூறும்போது, சிறுமி எப்போதும் அரிசியை நீரில் ஊறவைத்து சாப்பிடுவார் எனத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.