காப்பாற்றப்பட்ட பின் மீண்டும் குளத்தில் குதித்தவர் சடலமாக மீட்ப்பு.!

0
201

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குளத்தில் பாய்ந்த போது அங்கிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டார், எனினும் அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போனார்,

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில், நேற்று புதன்கிழமை ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர்,குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி வெளியில் எடுத்த பொழுது, மீண்டும் குளத்தில் பாய்ந்துள்ளார்.

மீண்டும் அப்பகுதி இளைஞர்கள் அவரை தேடிய போது குளத்தpலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரமேஷ் (வயது 33) எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here