300 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா கொடுப்பனவு ஒன்று வழங்கப்படவுள்ளதாக =ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மற்றும் அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன. குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மொழி மூல பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனால் பொலிஸ் வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய வந்தால் 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும்.
அதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை பொலிஸ் வேலையில் இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.