திருகோணமலை கடற்கரையில், கடந்த வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம், இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை தானியகம பகுதியைச் சேர்ந்த, 20 வயதுடைய இளைஞனுடைய சடலமே மீட்கப்பட்டுள்ளது.
நான்கு நண்பர்கள் கடல் குளிப்பதற்காக சென்ற போது, இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் பொலிஸ் உயிர் காக்கும் படையினரால் மீட்கப்பட்டதுடன், மற்றவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் கடற்படையினர் மற்றும் பொலிஸ் உயிர் காக்கும் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், இன்று காலை மீட்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.