சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகத்தை அனுபவிக்க இருக்கும் ராசிகள்..!

0
100

வருகின்ற வாய்ப்புகளை நிராகரிக்காதீங்க. அதே சமயம் அகல கால் வைத்து யாருக்கும் வாக்குறுதி தராதீங்க. சனி கிரகத்தைப் போல கொடுப்பாரும் இல்லை. சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். வர இருக்கின்ற சனியின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு யோகம் என்று பார்க்கலாம் வாங்க.

சனிப் பெயர்ச்சியால் மீன ராசிக்கு ஜென்ம சனி, கும்ப ராசிக்கு பாத சனியும், மேஷ ராசிக்கு விரய சனி தொடங்க உள்ளது. தற்போது கும்ப ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். வருகிற மார்ச் மாதம் 29ம் தேதி கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதத்திலிருந்து, மீன ராசியில் பூரட்டாதி 4ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அர்த்தாஷ்டமச் சனி என பல விதத்தில் சனியின் அமைப்பை குறிப்பிடப்படுவதால், சனி எப்போதும் கெடு பலன் அதிகமாக தருவார் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் அவரின் அமைப்பானது சில ராசிகளுக்கு நன்மையும் தரக்கூடியதாக அமையும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு மிகவும் நன்மையைத் தரக்கூடிய அமைப்பாக சனி பெயர்ச்சி காரணமாக மாற உள்ளது. ஏனெனில் எந்த ஒரு கிரகமும் லாப ஸ்தானத்தில் அமரும் போது, அவரின் காரகத்துவம் மூலம், எந்தெந்த வழிகளில் அந்த நபருக்கு சாதக பலனை தரக்கூடியவராக அமர்வார்கள். தொழில், வியாபாரம் செய்யக்கூடிய ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு, அதில் உள்ள கடன் பிரச்சனை தீர்வுகளோடு, உங்களுக்கு வர வேண்டிய பணம் மீட்டெடுப்பதற்கான சூழலை உருவாகும்.

ஒவ்வொருவரும் தங்களுடைய முன்னேற்றத்திற்காக முயற்சிகள் இருப்பது உண்டு. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும் அல்லது கிடைக்காமல் போகும். ஆனால் சனியின் அமைப்பால் ரிஷப ராசியினர் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சியிலும் சிறப்பான லாபத்தைப் பெற்றிடலாம்.

உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளது. நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழிலில் இரட்டிப்பு லாபம் பெறலாம். நேரம் சாதகமாக இருப்பின் அந்த லாபம் பல மடங்காக அதிகரிக்கும்.

மிதுனம்

ஒருவருக்கு தொழில், வேலை என வருமான ஆதாரத்தைத் தரக்கூடிய கர்ம காரகன் சனி ஆவார். சனி பகவான் மிதுன ராசிக்கு கர்ம ஸ்தானத்திலேயே அமர்வதால் நீங்கள் தொழில், வேலை நிமித்தமாக எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அதில் எதிர்பார்த்த வெற்றியை பெற்றிடலாம்.

உங்களுக்கு பணிச் சுமை ஏற்பட்டாலும், சளைக்காமல் செய்து முக்கிய கூடிய மன தைரியம், ஆற்றலை சனி தருவார். உங்களின் உழைப்பு திறனை அதிகரிப்பதோடு அதன் மூலம் நற்பெயரை பெற்று தருவார். அதனால் உங்களின் கர்மாவை நல்ல வகையில் வழி நடத்துவார். அடுத்த இரண்டரை வருடங்களுக்கு நீங்கள் மிகவும் கடுமையாக உழைப்பீர்கள் அதன் மூலம், லாபமும் நற்பெயரும் பெற்றிடலாம்.

கடகம்

இதுவரை அஷ்டம சனி பல நாள் அவதிப்பட்டு வந்த கடக ராசியினருக்கு தற்போது பாக்கிய ஸ்தானத்தில் சனியாக அமர உள்ளார். இதனால் முன் ஜென்மத்தில் செய்த நல்ல வினைக்கும், இந்த பிறவியில் செய்யக்கூடிய நல்ல செயல்களுக்கும் உரிய நற்பலன்களைப் பெறுவீர்கள்.

30 வருடங்களுக்கு பிறகு பாக்கிய ஸ்தானத்தில், கர்ம காரகன் சனியின் வருகை மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஆனால் உங்களுக்கு பல விதத்தில் நன்மை ஏற்படும்.

ஏழரை சனி காலத்தில் எந்த அளவுக்கு சனி மோசமான பலன் தருகிறாரோ அதற்கு எதிர்மறையாக மிக சிறப்பான பலன்கள் பாக்கிய சனி தர உள்ளார். இதுவரை அனுபவித்த துன்பங்களில் இருந்து விடுபடுவதோடு, உங்கள் வாழ்க்கையில் உச்சத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் சனி அமர உள்ளார்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் அமர உள்ளார். நம்முடைய வினைகளுக்கு ஏற்ற பலன் தரக்கூடிய கூடிய, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி மாறுவதோடு, உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனியும் முடிவடைவதால் இனி நன்மையே உங்களுக்கு உண்டாகும்.

நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதால், நீங்கள் எடுக்கக்கூடிய எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். புதிதாக தொழில், வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக அமையும். அதற்கான முயற்சியில் முழுக்க முழுக்க சனியின் ஆதரவு கிடைக்கும்.

சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அதற்கான சாதகமான சூழல் உருவாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய காலமாக அமையும்.

மகரம்

ஏழரை சனியிலிருந்து விடுபடக்கூடிய மகர ராசியினர், இதுவரை அனுபவித்து வந்த கடுமையான ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவது உங்களுக்கு பெரிய நிம்மதியைத் தரக்கூடியதாக அமையும். நீங்கள் செய்து முடிக்க நினைக்கும் வேலையிலும், அதற்கான முயற்சியிலும் தைரியத்தைத் தரக்கூடியவராக அமர்வார்.

இதுவரை சனி பகவான் தந்த பிரச்சனையிலிருந்து நீங்கள் பல அனுபவங்களை கற்று இருப்பீர்கள். அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வழித் துணையாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here