அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 40 ஆவது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற தேசிய இறுதிப் போட்டியில் திருமதி அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட அமந்தா, திருமதி உலக அழகி போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அமெரிக்காவின் லொஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 40 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் 2ஆம் இடத்தை பெற்று இன்று செவ்வாய்க்கிழமை (04) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பின்னர், “சில்க் ரூட்” முனையத்தில் தங்கி, காலை 09.00 மணியளவில், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றியுள்ளார்.
மேலும் ,தேசிய பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ருக்மல் சேனநாயக்க, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சுபாஷினி பெரேரா மற்றும் அதன் உதவிப் பணிப்பாளர் சுரேஷனி பிலபிட்டிய ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.