கண்டி – தலாத்துஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிமெட்டிய கட்டுகித்துல பகுதியில் உள்ள ஓடையில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி அன்று தலாத்துஓயா கட்டுகித்துல பகுதியில் வசித்து வந்த 27 வயதுடைய இளைஞன் காணாமல் போன நிலையிலே இவ்வாறு இன்று (04) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.