அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூன்று நபர்களைத் தாக்கி கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 வயது சந்தேக நபர் கித்துலங்கொடை தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அம்பலாந்தோட்டை, தங்காலை மற்றும் ஹுங்கம பொலிசார் நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து நேற்று (03) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோத மதுபானம் தொடர்பாக ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 2 ஆம் திகதி இந்தக் கொலைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.