நீ ஒல்லியா இருக்கிறாய்.. அழகாக இல்லை – டா.ர்.ச்.ச.ர் செய்த கணவன்.. பின்னர் நடந்த சோகம்.!

0
141

கேரளாவில் உள்ள மலப்புரம் பகுதியில் விஷ்ணுஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 25 வயது ஆகும் நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதில் பிரபின் ஆண் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த வாரம் விஷ்ணுஜா வீட்டில் சடலமாக கிடந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதில் பிரபின் திருமணமான முதல் நாளில் இருந்தே தன்னுடைய மகளை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொடர்ந்து அவர் துன்புறுத்தி வந்ததாகவும் அதனால்தான் தற்கொலை செய்து கொண்டு தன்னுடைய மகள் இறந்து விட்டதாகவும் பெற்றோர் வேதனையுடன் புகார் கொடுத்துள்ளனர்.

அதாவது தங்களுடைய மகள் மிகவும் ஒல்லியாக இருப்பதால் அவர் அழகாக இல்லை என்று கூறி தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். அதோடு விஷ்ணுஜா அழகாக இல்லை என்று கூறி தொடர்ந்து டார்ச்சர் செய்தது மட்டுமின்றி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் கடந்த வாரம் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது பிரபினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (பிரதி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here