நாட்டில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம்; முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்.!

0
67

நாட்டில் பெரும்பாலான நகரங்களில் இன்று புதன்கிழமை (05) நாள் முழுவதும் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காற்றின் தரக்குறியீடு 85 மற்றும் 128க்கு இடையில் பதிவாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும்,

குருநாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பில்பிட்டிய, திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சற்று ஆரோக்கியமற்ற நிலை காணப்பட்டது.

குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் 1 மணி முதல் 2 மணி வரை காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்று காணப்படும்.

எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம்.

காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, உடல்நலக் பிரச்சினைகள் உள்ள நபர்கள் குறிப்பாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here