கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் 6 மாத பச்சிளம் குழந்தைக்கு மயக்க மருந்து அதிகளவில் செலுத்தப்பட்டதால் உயிரிழந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
குண்டுலுப்பேட் தாலுக்காவில் ஹங்காலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்த்-சுபா தம்பதி. இவர்களின் 6 மாத ஆண் குழந்தைக்கு காது குத்தும்போது வலி தெரியாமல் இருக்க அருகில் உள்ள பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மையத்தில் மரத்துப்போகச் செய்யும் ஊசி போட எடுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர் நாகராஜூ, 200 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஊசி போட்ட சில நிமிடங்களில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் குழந்தையின் உடற்கூராய்வுக்கு பிறகு மருத்துவர் தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட மருத்துவ அலுவலர் உறுதியளித்து உள்ளார்.
வீடியோ இணைக்கப்படுள்ளது.👇