நேற்று அதிகாலை வாழைச்சேனை, ஓமடியாமடு பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தக் கொலையில் பலியானவர் திருப்பழுகாமம் பகுதியைச் சேர்ந்த 63 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இரண்டு உறவினர்களுக்கு இடையேயான பழைய தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து, ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக் கொண்ட போது, தகராறைத் தீர்க்க முயன்ற ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 26 வயதுடைய இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.