கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக பள்ளிக்கு வராமல் இருந்ததால் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது மாணவி கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களான பிரகாஷ், ஆறுமுகம் மற்றும் சின்னசாமி ஆகியோர்தான் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கைது செய்த நிலையில் ஆசிரியர்களை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஆசிரியர்கள் மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.