உப்பு விலை அதிகரிப்பு..!

0
22

உப்பு விலையை அதிகரிக்க ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை அதிகரித்ததன் காரணமாக இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 400 கிராம் உப்பு பக்கட் ஒன்றின் விலை 100 ரூபாவில் இருந்து 20 ரூபாவால் அதிகரித்து 120 ரூபாவாகவும், ஒரு கிலோ கல் உப்பு பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரித்து 120 ரூபாவில் இருந்து 180 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விலை உயர்வு தற்காலிக தீர்மானம் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் வருடாந்த உப்பு தேவை 200,000 மெற்றிக் தொன் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த வருடத்தின் கடைசி காலாண்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, நாட்டில் உப்பு உற்பத்தி குறைவடைந்தது.

இதன் காரணமாக, அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்தது, அதன்படி, 12,000 மெற்றிக் தொன் உப்பு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஹம்பாந்தோட்டை உப்புத் தொழிற்சாலையில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதால், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமென நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் உப்புத் தேவையில் 50 சதவீதத்தை ஹம்பாந்தோட்டை உப்பளத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, பரந்தன் மற்றும் புத்தளம் உப்பளங்களும் நாட்டின் உப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here