மொனராகல, பிபில பகுதியில் தாதியர் கல்வியை நிறைவு செய்த பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
மஹாஓயா, தம்பதெனிய பகுதியைச் சேர்ந்த 27 வயதான மெத்மா அதிகாரிய என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் மாலை தனது வீட்டின் பின்னால் உள்ள கிணற்றில் குதித்து அவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்க தாதி பாடசாலையில் பயிற்சியை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
உயிரிழந்த இளம் பெண் மன அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மஹாஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.