கொழும்பு கோட்டை – யோர்க் வீதியில் இடம்பெற்ற விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளது. தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த யாசகர் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த யாசகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.