மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. நீர் கட்டணம் குறைக்கப்படும்..!

0
43

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, இந்த மாத இறுதியில் நீர் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நீர் கட்டணத்தைக் குறைப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தனக்குக் கிடைத்ததாக அதன் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு கட்டண திருத்தம் குறித்த முடிவை அறிவிக்க முடியும் என்று ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.