காதலர் தினத்துக்கு இன்னும் 2 நாள் தான். காதலர்கள், காதலை தெரிவிக்க நினைப்பவர்கள், திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் என அனைவரும் தங்கள் துணைக்கு ஏதாவது பரிசுகளை வாங்கி கொடுத்து அசத்த வேண்டும் என நினைக்கின்றனர். பரிசுகள் பொதுவாக அன்பை உணர வைக்கும். காதலர் தினத்தை பொறுத்தவரை காலம் காலமாக ரோஜா பூ, சாக்லேட், டெடி பியர் இவைகளை பரிசளிப்பது தான் வழக்கமாக இருந்தது.
ஆனால் உங்கள் அன்பை, காதலை, உறவை வலுப்படுத்த விரும்பினால், ராசிப்படி பரிசுகளை வாங்கி கொடுக்கும் போது அது உறவில் இனிமையைக் கொண்டு வருவதோடு, உறவுகளையும் வலுப்படுத்தும். காதலை வலுப்படுத்த நினைத்தால், உங்கள் காதலரின் ராசிக்கேற்ப பரிசுகளை வாங்கி கொடுங்கள். அந்த வகையில் எந்த ராசியினருக்கு எந்த பொருளை காதலர் தின பரிசாக கொடுக்கலாம் என பட்டியலிடப்பட்டுள்ளது.
மேஷம்;
உங்க லவ்வர் மேஷ ராசி எனில் காதலர் தினத்தில் அவர்களை ஒரு அழகான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அதோடு அவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச், காலணிகள், ஜாக்கெட்டுகள், கேஜெட்டுகள் இவைகளை பரிசாக கொடுத்து அசத்தலாம். இதனால் உறவில் இனிமை சேரும்.
ரிஷபம்;
உங்க லவ்வர் ரிஷப ராசி எனில் அழகான மோதிரம், கேஜெட்டு, நெக்லஸ், செயின் இவைகளை வாங்கி கொடுக்கலாம். ஒரு நல்ல ரெஸ்டாரண்ட்டில் டின்னருக்கு அழைத்துச் செல்லாம். இதனால் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
மிதுனம்;
உங்க லவ்வர் மிதுன ராசி எனில் அவர்களுக்கு பிரேஸ்லெட், ஷூ, நகை இவைகளை பரிசாக வழங்கலாம். இதனால் காதல் உறவு மேம்படும்.
கடகம்;
உங்க லவ்வர் கடக ராசி எனில் பெர்ஃப்யூம், மேக்கப் பாக்ஸ், ஜாக்கெட் இவைகளை காதலர் தின பரிசாக கொடுக்கலாம்.இதன் மூலம் உறவு இன்னும் ஆழமாகும்.
சிம்மம்;
உங்க லவ்வர் சிம்ம ராசி எனில் அவர்களுக்கு பிடித்தமான மொபைல் போனை பரிசாக வழங்கலாம். இதனால் இருவருக்கும் இடையேயான நெருக்கம் இன்னும் அதிகமாகும்.
கன்னி;
உங்க லவ்வர் கன்னி ராசி எனில் பாடல்கள் நிறைந்த பென்டிரைவ், பெர்ஃப்யூம், லெதர் ஜாக்கெட் அல்லது பிளாட்டினம் செயின் போன்றவற்றை பரிசாக கொடுக்கலாம். இதனால் இருவருக்கும் இடையே காதல் நீடிக்கும்.
துலாம்;
உங்க லவ்வர் துலாம் ராசி எனில் ஃபார்மல் பேண்ட், ஷர்ட், ஷூ, டை, வாட்ச் இவைகளை காதலர் தின பரிசாக கொடுக்கலாம். இது இருவருக்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்கும்.
விருச்சிகம்;
உங்க லவ்வர் விருச்சிக ராசி எனில் அவர்களுக்கு பெர்ஃப்யூம், பர்ஸ், லெதர் பெல்ட், ஷூ, புதிய கலெக்ஷன் ஷர்ட், ஜாக்கெட் இவற்றில் ஏதாவது ஒன்றை பரிசாக வழக்லாம். இதன் மூலம் உங்கள் உறவு மேலும் வலுப்படும்.
தனுசு;
உங்க லவ்வர் தனுசு ராசி எனில் அவருக்கு காதலர் தின பரிசாக அவர்களை கோயில் போன்ற புனிதமான ஸ்தலங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இதன் மூலம் இருவருக்கும் இடையேயான சந்தோஷம் அதிகரிக்கும். இத்துடன் டிராவல் பேக், வாட்ச் மற்றும் ஆடைகளை பரிசாகவும் வழங்கலாம்.
மகரம்;
உங்க லவ்வர் மகரம் ராசி எனில் ஒரு பழக்கூடையுடன் மொபைல் போன், லேப்டாப், எலக்ட்ரானிக் டைரிகளை காதலர் தின பரிசாக வழங்கலாம்.
கும்பம்;
உங்க லவ்வர் கும்பம் ராசி எனில் அவருக்கு மேக்கப் பாக்ஸ், எலக்ட்ரானிக் கேஜெட், நெக்லேஸ், தங்க மோதிரத்தை காதலர் தின சிறப்பு பரிசாக வழங்கினால் புன்னகையுடன் உறவு நீடிக்கும்.
மீனம்;
உங்க லவ்வர் மீன ராசி எனில் காதலர் தினத்தில் அவருக்கு ஸ்மார்ட்வாட்ச், ப்ளூடூத் இயர்ஃபோன், ஸ்மார்ட்போன், பர்ஸ் மற்றும் பெர்ஃப்யூம் இவைகளை பரிசாக வழங்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.