ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய விவகாரம் – பழைய மாணவர்கள் குற்றச்சாட்டு..!

0
96

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய அதிபரின் மேல் உள்ள தனிப்பட்ட பகைக்காக சிலர் திட்டமிட்டு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பழிசுமத்தி வருகின்றனர். குறித்த செயற்பாட்டினை கண்டித்து 1995 ம் ஆண்டு க.பொ.த. சா/த பழைய மாணவர்கள் இன்றையதினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்கள்.

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

அன்பான வேண்டுகோள்..!

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் அன்பான பெற்றோர்களுக்கு.!

உங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய தூரநோக்கு சிந்தனையுடன் தங்களின் மேலான கவனத்திற்கு.!

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் ஒரு அரச நிறுவனம். அங்கு பணியாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அரச சுற்றுநிருபங்களுக்கு அமைவாகவே கடமை ஆற்ற முடியும். அவற்றை பின்பற்றாத விடத்து அரச திணைக்களங்கள் ஊடாக அவர்களுக்கு நடவடிக்கை எடுக்க முடியும். தற்போதைய அரசாங்கம் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி வருவது யாவரும் அறிந்த விடயம் ஒன்றே!

ஆனால் கடந்த ஒரு வருடமாக பாடசாலையின் பெயரை பயன்படுத்தி தங்களுக்குகென ஊரில் ஓர் அதிகாரத்தையும் புகழையும் வருமானத்தையும் ஈட்டிக் கொள்வதற்காக வெளிநாட்டிலுள்ள ஒரு சில தீய மற்றும் உள்நோக்கங்கள் கொண்ட நபர்களும் அவர்களோடு தொடர்புபட்ட அவர்களால் பலனடைந்த உள்நாட்டிலுள்ள ஒரு சில சுயநலவாதிகளும் உரிய நிர்வாக நடைமுறைகளை பின்பற்றாத பாடசாலைச் சங்க பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து பாடசாலை அதிபர் மீது உள்ள தனிப்பட்ட பகைகளால் பல குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை வலயக்கல்வி அலுவலகமோ, மாகாண கல்வி திணைக்களமோ அதிபரால் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என இதுவரையில் கூறப்படவில்லை. (விசாரணை இடம்பெற்று வருகின்றது)

தற்போது எமது பாடசாலை சுமூகமாக இயங்கி வருவதுடன் பாடசாலையின் கல்வி அடைவுமட்டம் திருப்திகரமாக காணப்படுகின்றது. எனவே பாடசாலையோடு தொடர்புடைய சங்கங்களின் பெயரைப் பயன்படுத்தி பாடசாலையை குழப்பநினைக்கும் தீய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு துணை போக வேண்டாம் என அன்போடு வேண்டிக் கொள்வதோடு நாம் ஒன்று பட்ட சமூகமாய் வாழ்ந்து உறவுகளை மதித்த காலத்தை நினைந்து ஒருசிலரின் வெளிநாட்டு பணத்தின் திமிர்களுக்கும் அவர்களின் மேலாதிக்க ஆசைகளுக்கும் இடம் கொடுக்காது சுயமாக சிந்திக்கும் சமூகமாக அவர்களை எதிர்த்து அணிதிரள்வீர்கள் என நாம் நம்புகின்றோம்.

பாடசாலை சமூகத்தை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதன் மூலம் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை ஸ்தம்பித நிலைக்குச் கொண்டு செல்வதால் தங்களது பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகும். என்பதை தங்களின் மேலான கவனத்தில் கொள்ளுமாறு நாம் வேண்டி நிற்கின்றோம்.

1995ம் ஆண்டு சாதாரண தர மாணவர்களாக நாம் பாடசாலையுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம். தீயவர்களால் குறிப்பிடப்படுவது போல் எதுவித இடர்களையும் நாம் எதிர்கொள்ளவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நாங்கள் அனைவரும் பழைய மாணவர்கள் சங்க செயலாளரால் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதுடன் இப்போராட்டத்தில் இருந்து முற்றாக விலகியிருக்க தீர்மானித்துள்ளோம்.

பாடசாலை மீது உங்களுக்கு அதிருப்தி இருந்தால் நேரடியாக சென்று அதிபர், ஆசிரியருடன் கலந்து உரையாடுங்கள் அப்போது உங்களுக்கு நிலைமைகள் விளங்கும். அதிபர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதும் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளியிலிருந்து கொண்டு நாங்கள் சொல்வதை தான் ஒரு அரச பாடசாலை அதிபர் செய்ய வேண்டும். எங்களைக் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பது முட்டாள்தனம். உரிய பொறிமுறைகள் ஊடாக அணுகினால் பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடசாலை நிர்வாகம் ஒருபோதும் தடையாக இருக்காது.

அன்பான வேண்டுகோள்..!

சுமூகமாக இயங்கும் பாடசாலையை குழப்ப முயலும் தீய சக்திகளின் எந்த ஒரு முயற்சிகளுக்கோ போராட்டங்களுக்கோ துணை போக வேண்டாம் என வேண்டி நிற்கின்றோம்.

தங்களின் சுயலாபங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் தீயவர்களை எங்கள் இறைவன் தான்தோன்றி ஈஸ்வரன் அருள் சாட்சியாக உரிய பிரதிபலன்களை விரைவில் அனைவரின் கண்முன் அனுபவிப்பதை நீங்கள் காண்பீர்கள் குறித்த அறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here