139 பொலிஸ் அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் பொலிஸச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் 105 தலைமை பொலிஸ் பரிசோதகர்களும் 34 பொலிஸ் பரிசோதகர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இடமாற்றங்கள் பெப்ரவரி 13 ஆம் திகதியில் இருந்தும் மற்றும் 18 ஆம் திகதியில் இருந்தும் அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளரின் அனுமதியுடன் பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் வழங்கப்பட்டுள்ளன.