4 பேரை காவுவாங்கிய விபத்து தொடர்பில் வெளியான தகவல்.!

0
116

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் தோரயாய பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது ஐந்து நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகக் குருநாகல் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பேருந்து சாரதி நேற்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன் (10) அதிகாலை இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 34 பேர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

குருநாகல் நகரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில் உள்ள தோரயாய பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

கதுருவெலவிலிருந்து குருநாகல் நோக்கி வழித்தடம் 48 இல் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தோரயாய பகுதியில் நின்றிருந்த தனியார் பேருந்தின் மீது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து மோதியது.

குறித்த பேருந்து மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகத்தில் பயணித்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த பேருந்து மீது மற்றைய பேருந்து மோதியதில் அருகில் இருந்து தோட்டமொன்றிற்கு இழுத்துச் செல்லப்பட்ட பேருந்து மரமொன்றில் மோதி நின்றுள்ளது.

இதனையடுத்து, பிரதேசவாசிகள் விரைவாகச் செயல்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here