யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்துள்ளார். எனினும், அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டு அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கு முன்னர் சம்பவ இடத்தில் நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோவை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
Video – https://web.facebook.com/100091900877215/videos/pcb.552413651165326/9023334551118326