பொதுவாக, மக்கள் வேலைக்கு பேருந்து, இரு சக்கர வாகனம் அல்லது ரயிலில் செல்வார்கள். சிலர் காரில் கூட பயணம் செய்வார்கள். ஆனால் ரேச்சல் கவுர் என்ற பெண் மலேசியாவின் பினாங்கில் வசிக்கிறார். இவர் ஒரு இந்திய வம்சாவளி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கோலாலம்பூரில் வேலை செய்கிறார். முன்னதாக, அவர் கோலாலம்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கினார்.
அந்த நேரத்தில், தனது குழந்தைகளைப் பார்க்க வார இறுதி நாட்களில் பினாங்குக்கு வருவார். ஆனால் இப்போது அவரது குழந்தைகள் வளர்ந்து வருவதால், அவர்களுடன் இருக்க ஒவ்வொரு நாளும் வேலைக்கு விமானத்தில் செல்கிறார். அவர் பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு 700 கி.மீ தினமும் விமானத்தில் பயணம் செய்கிறார். விமானத்தில் பயணம் செய்வது தனக்கு சிக்கனமானது என்றும் அவர் கூறினார்.
தினசரி பணிப் பயணத்திற்காக ஒவ்வொரு மாதமும் இந்திய மதிப்பில் சுமார் 28,000 செலவிடுகிறார்.
கோலாலம்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதற்கு மாதத்திற்கு சுமார் 1400 முதல் 1500 ரிங்கிட் வரை செலவாகும். முன்பு உணவுக்கு 600 ரிங்கிட் வரை செலவாகும் உணவு செலவுகள் இப்போது 300 ரிங்கிட் ஆகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் விமானத்தில் பயணம் செய்வது தனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட அனுமதிக்கிறது. பண்டிகை நேரங்களில் விமானத்தில் இருக்கை கிடைப்பது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆனால் எப்படியாவது வீட்டிற்கு வந்துவிடுவேன் என்று அவர் கூறினார்.