பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது கூறிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் கங்காராம, ஹுனுப்பிட்டிய குறுக்கு வீதியில், புதன்கிழமை (12) அதிகாலை 2 .00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மோப்ப நாய் உதவியுடன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.