முல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த பயங்கரம்.!

0
187

முல்லைத்தீவு- முறிப்பு பகுதியில் குழுக்களுக்கிடையில் நேற்றையதினம் இடம்பெற்ற கைக்கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது…

முல்லைத்தீவு – முள்ளியவளை – முறிப்பு பகுதியில் ஒரு குழுவினர் இணைந்து குடும்பஸ்தர் ஒருவருடன் வாய்த்தர்க்கதில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 36 வயது மதிக்கத்தக்க முறிப்பு பகுதியில் வசிக்கும் மோகன் கோகுலன் எனும் குடும்பஸ்தரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here