யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பயணித்த கார், சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பொழுது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் சாவகச்சேரி நோக்கி திரும்பிய வேளை, பின்னால் வந்த பாராளுமன்ற உறுப்பினரின் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உதவியாளர், சாரதி மூவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இளங்குமரன் பயணித்த வாகனம் மீதான விபத்து திட்டமிட்ட ஒன்றாக இருக்கலாம் என பலராலும் பேசப்பட்டு வருகின்றது.