புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியிலுள்ள கோயில் குளக்கட்டு பின்பகுதியில்,விற்பனைக்கு தயாராக இருந்த கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் அதே பகுதியில் கசிப்பை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.சுபேசனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் நேற்று சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், 37, 36,29 வயதுடைய மன்னாகண்டல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை ஒட்டுசுட்டான் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்பட இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.