யாழ் சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்றது.
எனினும், இன்றைய தினம் (16) இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீசன் (வயது -35) என்ற உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருப்பதுடன், கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது, தனது சேவையை நேர்மையாக திறமையுடன் துடிதுடிப்புடன் செய்து வந்தவர்,
தமிழப்பற்றுடன் மிகச்சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதியில் செய்து வந்தார், கடவுள் பக்தியுடன் அறம்சார்ந்து இயங்கினார், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பல பாடசாலை மாணவர்களுக்கு இயலுமான உதவிகள் செய்தவர்,
இவரது இழப்பினால் பரிதவிக்கும் அவரது பிள்ளைக்கும், தமிழினியின் பெற்றோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்.