காதலனை பழிவாங்க காதலி செய்த சம்பவம்..! Video

0
48

உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கோலாகலமாக பரிசுப்பொருட்கள், சாக்லேட், ரோஜாக்கள், முத்தங்கள் என விதவிதமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தங்கள் ஜோடிகளுடன் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் கூர்கான் பகுதியில், தனது காதல் ப்ரேக்-அப் ஆன நிலையில், இளம்பெண் ஒருவர், தனது முன்னாள் காதலனைப் பழிவாங்கும் விதமாக காதலர் தினத்தன்று இரவு ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் டெலிவரி செய்யும் விதமாக 100 பீட்சாக்களை ஆர்டர் செய்து, கேஸ் ஆன் டெலிவரி ஆப்ஷனை தேர்வு செய்து காதலனை எரிச்சலடைய செய்துள்ளார். இந்த சம்பவம் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குர்கானைச் சேர்ந்த 24 வயது பெண் ஆயுஷி ராவத் மற்றும் அவரது முன்னாள் காதலன் யாஷ்.. அவர்களின் உறவின் ஒரு கட்டத்தில், அவர்களின் காதல் முறிந்தது. இதில், தனது காதலன் யாஷைப் பழிவாங்க விரும்பிய ஆயுஷி ராவத், ஒரு தனித்துவமான மற்றும் பழிவாங்கும் செயலை எடுக்க முடிவு செய்தார். அதன்படி, ஆயுஷி தனது முன்னாள் காதலனின் வீட்டிற்கு COD மூலம் 100 பீட்சாக்களை அனுப்பினார், அதாவது யாஷ் டெலிவரிக்கு பிறகு பணம் செலுத்த வேண்டும்.

அதன்படி, ஆயுஷி ஆர்டர் செய்த 100 பீட்சாக்களைப் பார்த்து கோபமடைந்த அவரது முன்னாள் காதலன் யாஷ், டெலிவரிக்கு பணம் செலுத்த முடியாமல் டெலிவரி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வேடிக்கையான சம்பவம் ஆன்லைனில் வைரலாகி வருகிறது, மேலும் இது டெலிவரி நிறுவனத்திற்கான விளம்பரமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by NAUGHTYWORLD (@naughtyworld)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here