அஸ்வெசும கொடுப்பனவு – ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு.!

0
167

அஸ்வெசும நலத்திட்ட உதவித்தொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (17) இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அந்தவகையில் அஸ்வெசும திட்டத்திற்காக 232.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”மக்களின் உண்மையான ஊதியம் குறைந்துவிட்டதால், நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

ஒரு மனிதாபிமான அரசாங்கத்தின் பொறுப்பு அதன் குடிமக்களைப் பராமரிப்பதாகும். அதன்படி ஜூலை மாதம் முதல் சிரேஷ்ட பிரஜைகளின் வசதிக்காக பணத்தை அதிகரித்துள்ளோம்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் அஸ்வெசும கிடைக்காத குடும்பங்களை கண்டறிவதற்கான விசேட வேலைத்த்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிததார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here