இம்முறை வரவு செலவுத்திட்டத்தை நாம் வடக்கிற்கான வரவு செலவுத்திட்டமாவே கருதுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
“இன்றைய தினம் பாராளுமன்றிலே சமர்ப்பிக்கப்பட்ட எங்களது வரவு செலவுத்திட்ட விவாதத்தை உண்மையாவே யாழ்ப்பாணத்தில் பிறந்த சாதாரண மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை விடயங்களை எங்களது ஜனாதிபதி தந்திருக்கின்றார் என்பதிலே எதிர்க்கட்சியில் இருந்து சந்தோஷப்படக்கூடிய ஒரேயொரு மனிதன் நானாகத்தான் இருப்பேன். உங்களுக்குத் தெரியும் இந்த வரவு செலவுத்திட்டம் எங்கள் மக்களுக்கு. என்னை பொறுத்தவரையில் எனக்கு அரசியல் தேவையில்லை. நான் அரசியலுக்காக அரசியல் செய்ய வரவில்லை. ஆகவே இந்த மக்களுடைய தேவைகளை அறிந்து வைத்து எமது பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களும் ஜனாதிபதி அவர்களும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததையிட்டு நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். இதனை நாங்கள் வடக்கிற்கான பட்ஜெட்டாவே நாம் கருகிறோம். ”